மும்பையில் நோயாளிக்கு தவறான சிகிச்சை - ரூ. 4½ லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பெடர்ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவீந்திர பால். இவர் கடந்த 2012-ம் ஆண்டு உடல் நல குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

அங்கு அவருக்கு எக்ஸ்ரே மற்றும் ரத்த பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு காசநோய் இருப்பதாக கூறி நுரையீரல் நிபுணரான மருத்துவர் சுரேஷ் ராங் என்பவர் சிகிச்சை அளித்தார். இருப்பினும் அவருக்கு உடல் நலம் பாதிப்பு தீவிரமானது. 

இதையடுத்து, ரவீந்திருக்கு மற்றொரு மற்றொரு மருத்துவர் பரிசோதனை நடத்தினர். அதில், அவருக்கு காசநோய் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ரவீந்திர பால் தனக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் சுரேஷ் ராங் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் இழப்பீடு வழங்கும்படி முறையிட்டுள்ளார்.

இதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்புத் தெரிவித்ததால், ரவீந்திரபால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி டி.எஸ்.பரத்கர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 

அதன் முடிவில், மருத்துவர் நோய் பற்றி அறியாமல் தவறான சிகிச்சை மற்றும் தேவையற்ற பரிசோதனை வழங்கப்பட்டதாகவும், நோயாளியின் ஒப்புதல் இல்லாமல் ஊக்க மருந்துகள் செலுத்தப்பட்டதால் உடல் நலம் பாதிப்புக்குள்ளானதும் தெரியவந்தது. 

இதையறிந்த நீதிமன்றம் உடல் நலம் பாதிக்கப்பட்ட ரவீந்திர பாலுக்கு மருத்துவர் மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் இணைந்து ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four lakhs compansation to patient for wrong treatment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->