இந்திய தேர்தல் ஆணையராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் நியமனம்.! - Seithipunal
Seithipunal


இந்திய தேர்தல் ஆணையராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில சட்டமன்ற தேர்தலை நடத்தும் முக்கிய பொறுப்பைக் கொண்டது.

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் டிசம்பர் மாதத்தில் குஜராத் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அருண் கோயில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அருண் கோயல் 1985 ஆம் ஆண்டு பஞ்சாப் கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். மேலும் இவர் மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சகத்தின் செயலாளராகவும் பதவி வைத்துள்ளார். இந்த நிலையில் புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயலை மத்திய சட்ட அமைச்சகம் நியமனம் செய்துள்ளது இவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி ஒப்புதல் வழங்கி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former IAS officer Arun Goyal appointed as Election Commissioner of India.


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->