பிளிப்கார்ட் நிறுவனத்தை மன்னிப்பு கேட்க வைத்த பெண் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


எக்ஸ் (ட்விட்டர்) வலைதளத்தில் @gharkakabutar என்ற கணக்கை உடைய டெய்ட்டி என்ற பெண் பயனரின் தந்தை, ஃபிளிப்காட் வணிக இணையதளத்தில் ஆர்டர் ஒன்று செய்துள்ளார். அதனை விநியோகிக்க வந்தவர், டெய்ட்டியின் தந்தையிடம், பொருளை விநியோகிப்பதற்காக ஒரு முறை கடவுச்சொல்லை கூறும்படி தெரிவித்திருக்கிறார். 

இதையடுத்து, வயதான அந்த தந்தை தனது செல்போனில் ஒருமுறை கடவுச் சொல்லைக் கண்டறிந்து சொல்ல முடியாமல் தடுமாறியுள்ளார். இந்த நிலையில், தனக்கு நேரமாவதாக கடுப்படித்த டெலிவரிமேன், டெய்ட்டியின் தந்தையிடம், “எதுவும் தெரியவில்லை என்றால் நீங்கள் எல்லாம் எதற்காக ஆர்டர் செய்கிறீர்கள்" என்று தடித்த வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இதனால் அந்த முதியவர் மிகவும் வேதனைப்பட்டுள்ளார். இதனையறிந்த டெய்ட்டி தனது எக்ஸ் வலைதளத்தில், இந்த சம்பவத்தை குறிப்பிட்டு "இனி ஃபிளிப்கார்ட்டில் எதுவும் ஆர்டர் செய்யப் போவதில்லை" என்று பதிவிட்டார்.

இந்தப் பதிவு 1 லட்சத்து 70 ஆயிரம் பார்வைகளைக் கடந்து கவனம் பெற்றதைத் தொடர்ந்து, ஃபிளிப்கார்ட் நிறுவனம் இந்த விரும்பத்தகாத செயல் நேர்ந்ததற்காக வருத்தம் மற்றும் மன்னிப்பு கோரியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flipkart company apologies to customer


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->