நாடு முழுவதும் இன்று சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் இன்று சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு.!

யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட இருபத்தொரு வகையான பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 1,105 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி அறிவித்தது.

இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி மாதம் 21-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தத் தேர்வுக்கு நாடு முழுவதில்லிருந்து சுமார் 7 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்தத் தேர்வர்களுக்கான முதல் நிலை தேர்வு மே 28-ம் தேதி நடைபெறும் என்று யுபிஎஸ்சி அறிவித்திருந்தது.

அதன்படி சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று 73 நகரங்களில் நடைபெறுகிறது. அதில், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட ஐந்து நகரங்களில் நடைபெறுகிறது. 

இதில் பொது அறிவுத் தேர்வு காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும்,  திறனறிவு தேர்வு மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

first exam for civil service posts in india today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->