15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாகனங்களை அழிக்க மகாராஷ்டிரா மாநில அரசு முடிவு.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், விபத்துக்களை தவிர்க்கவும் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழமையான வாகனங்களை அழிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தியுள்ளது. 

அதன் படி, மத்திய அரசின் வாகன அழிப்பு கொள்கைக்கு மாநில அமைச்சர் சபை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்புதல் அளித்தது. அந்த ஒப்புதலின் படி, முதல் கட்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழமையான அரசு வாகனங்களை வருகிற ஜூன் மாதத்திற்குள் அழிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

இதுதொடர்பாக கூடுதல் போக்குவரத்து ஆணையர் ஜே.பி. பாட்டீல் தெரிவித்ததாவது, "15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழமையான அரசு வாகனங்கள் அழிக்கப்பட உள்ளது. இதே போன்று 15 ஆண்டுகள் பழமையான தனியார் வாகனங்களுக்கு பசுமை வரியை அதிகரிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. 

மேலும், மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கும் அபராதத்தை அதிகரிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது" என்றுத் அவர் தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல், பழைய வாகனங்களை அழிக்கும் மையங்களையும் அதிக அளவில் தொடங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. 

இது தொடர்பாக மாநில போக்குவரத்து ஆணையர் விவேக் பிமன்வர் தெரிவித்ததாவது, "மாநிலம் முழுவதும் பல இடங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை அழிப்பதற்கு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. அந்த மையங்களில் அறிவியல் முறையில் வாகனங்களை அழிக்க முடியும்" என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fifteen years oldest vechicles destroy in maharastra


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->