காதல் திருமனம் செய்த மகள்.. பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூர தந்தை..! - Seithipunal
Seithipunal


பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள வனபகுதியில் இளம்பெண் மற்றும் 5 மாதகுழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த சடலம் சிதைந்திருந்ததால் அந்த சடலம் யாருடையது என கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால், அந்த பெண் குறித்த தகவலை சமூகவலைதளங்களில் பரவவிட்டனர். அவர்களுக்கு அந்த பெண் யார் என்பது குறித்த தகவல்கள் தெரியவந்தது. இதனை அடுத்து அந்த பெண் குறித்த தகவல்களை காவல்துறையினர் சேகரிக்க தொடங்கினர்.

அந்த பெண் கடந்த ஒன்ரறை வருடத்திற்கு முன் காதல் திருமணம் செய்து வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராற்றால் கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது சகோதரிக்கு வீட்டிற்கு சென்றார்.

இதனை அடுத்து, அந்த பெண்ணின் சகோதரியிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அவர் அளித்த வாக்குமூலத்தில் தீபாவளிக்காக அவரது சகோதரி வீட்டுக்கு அந்த இளம்பெண் வந்துள்ளார்.

அப்போது, அந்த இளம்பெண்ணின் குழந்தை நிமோனியா காய்ச்சலால் இறந்துவிட்டது. அதனை அவரது கணவனுக்கு சொல்ல வேண்டாம் என சகோதரியுடம் கூறியுள்ளார்.

அதனால், அவரது சகோதரி தனது தந்தை மற்றும் சகோதரனை வர சொல்லி குழந்தையி இறுதி சடங்கை செய்ய சொல்லி இருக்கிறார்கள். அப்போது வனபகுதிக்கு சென்ற போது தங்கையை தந்தை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.

ஆனால், அந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரின் தந்தையை  பிடித்து கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். அவர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை அதிர்ச்சியடைய செய்தது.

குழந்தையின் இறுதி சடங்கிற்காக வனபகுதிக்கு சென்ற போது தந்தைக்கும் அவரது சகோதரிக்கும் காதல் திருமணத்தை பற்றி வாக்குவாதம் ஏற்பட்டது.  ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அவரை கடுமையாக தாக்கி பெற்ற மகள் என்றும்  பாராமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த பெண் வேறு சமூகத்தை சேர்ந்தவரை கல்யாணம் செய்ததால் அவரை கொலை செய்ய முடிவேடுத்தாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father arrested for sexually abusing daughter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->