மீண்டும் மீண்டுமா.!! நள்ளிரவில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!! - Seithipunal
Seithipunal


கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் நேற்று இரவு உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜிப்பூர் பகுதியில் இருந்து டெல்லியின் ஆனந்த் விகார் செல்லும் சுஹைல்தேவ் விரைவு ரயில் நேற்று இரவு பிரக்யராஜ் ரயில் நிலையத்தில் கடந்து சென்று கொண்டிருந்தபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்ற முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்களும், அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Express train derails in Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->