நெருங்கும் தேர்தல்: கருத்துக் கணிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் ஆணையம்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம் சிக்கிம் போன்ற 4 மாநில சட்டசபை தேர்தலும் இந்த தேர்தலுடன் நடக்க உள்ளது. 

அதேபோல் 12 மாநிலங்களில் காலியாக உள்ள 25 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்தவோ வெளியிடவோ தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

குறிப்பாக  முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7:00 மணி முதல் இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி மாலை 6.30 மணி வரை எந்த ஒரு கருத்து கணிப்புகளும் இருக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதே போல் வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள், தேர்தல் ஆய்வுகள் தொடர்பான தகவல்கள் போன்றவற்றை ஊடகங்களில் வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election Commission orders ban polls


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->