வாக்காளர் பட்டியல் தயாரிப்பு - மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகள் நடைபெறும். அப்போது, 18 வயது நிறைவடைந்தவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும். இந்நிலையில், தற்போது மக்களவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. 

அதன் படி தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஜன.22ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை நடைபெற்றது.

இந்நிலையில், மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மார்ச் 27ஆம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 

இந்த வாக்காளர் பட்டியல் என்பது கடந்த ஜன.1ஆம் தேதியை தகுதியேற்கும் நாளாக கொண்டு அமைந்திருக்க வேண்டும். அதன்படி, 18 வயது நிரம்பியவர்கள் கடந்த ஜன.22, மார்ச் 17ஆம் தேதிக்கு இடையில் விண்ணப்பித்திருந்தால் அதில் தகுதியானவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election commission order to state election officers for vote list


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->