புதிய அறிவிப்புகள், அரசாணைகள் வெளியிடக்கூடாது - தேர்தல் ஆணையம் அதிரடி.! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் புதிய அறிவிப்புகள், அது தொடர்பான அரசாணைகள் உள்ளிட்டவற்றை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு துறைகளின் செயலர்களுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ”கடந்த தேர்தலின் போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு, முன் தேதியிட்டு அறிவிப்பு அரசாணை வெளியானதால் சர்ச்சை எழுந்தது. 

துறைகளின் செயலர்கள் அரசாணை தொடர்பான பதிவேட்டில் இறுதி அரசாணை வெளியிட்ட பின்பு ஒரு கோடிட்டு முடிக்க வேண்டும். ஒரு கோடிட்டு முடிப்பதை நகல் எடுத்து தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். 

இதனால் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கலாம். கோடிட்டு முடித்த அரசாணை நகலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்துக்குள்ளாக அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election commission order dont publish new announcement after election date announce


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->