நெருங்கும் தேர்தல் - அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்.! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் குழந்தைகளை தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்த வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. 

இது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள அறிவுறுத்தலில், தேர்தல் பணியின் போது குழந்தைகளை எந்த வகையிலும் ஈடுபடுத்துவதை கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் ஏற்க முடியாது.

குழந்தைகளை கையில் ஏந்திக்கொண்டு செல்வது, வாகனங்களில் குழந்தைகளை ஏற்றி செல்வது, பேரணிகள் உள்ளிட்ட பிரச்சார நடவடிக்கைகளுக்கு குழந்தைகளை அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பயன்படுத்தக்கூடாது.

அதேசமயம், எந்தவொரு தேர்தல் பிரச்சார நடவடிக்கையிலும் ஈடுபடாமல் ஒரு அரசியல் தலைவரின் அருகில் ஒரு குழந்தை அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் இருப்பது விதிகளை மீறுவதாக கருதப்படாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election commission imposed restrictions for election


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->