அரசு பள்ளி சீருடையில் அதிரடி மாற்றம் - கல்வித்துறை அசத்தல் அறிவிப்பு.!
education department announce school uniform change in pudhuchery
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு சுடிதார் மீது ஒவர்கோட் அணியும் முறை தற்போது நடைமுறையில் இருக்கிறது. இதனை பின்பற்றி புதுச்சேரியிலும் பள்ளி சீருடையில் மாற்றம் கொண்டுவர கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது.
இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தால் சீருடை மாற்றம் கைவிடப்பட்டது. இருப்பினும் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவிகள் ஓவர்கோட் அணியும் முறை நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் சுடிதார் மேல் ஓவர்கோட் அணிய வேண்டும் என்று கல்வித் துறை துணை இயக்குனர் கவுரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கான வடிவமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பை கண்காணிப்பு அதிகாரிகள் பள்ளி தோறும் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து காண்பித்து மாணவர்கள் ஒவர்கோட் தைக்க அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
English Summary
education department announce school uniform change in pudhuchery