முடிவுக்கு வந்தது மருத்துவர்களில் போராட்டம்!! வெளியான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நான்கு நாட்களுக்கு முன் நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள் அங்கிருந்த மருத்துவர்களை சரமாரியாகத் தாக்கினர். இதற்கு கண்டனம் தெரிவித்து இளநிலை மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். 

மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து,  அதாவது இன்று 17-ந்தேதி காலை 6 மணி முதல் 18 ஆம் தேதி காலை 6 மணி வரையிலான 24 மணி நேரம், தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் தங்களது மருத்துவ சேவைகளை நிறுத்தி வைத்து இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர், பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார் அதை ஏற்க மறுத்த மருத்துவர்கள், ஊடகங்கள் முன்னிலையில் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் நிபந்தனை விதித்து இருந்தனர்.

இதனையடுத்து, ஊடகங்கள் முன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கையையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானெர்ஜி ஏற்றார், இதனைத்தொடர்த்து போராட்டம் நடத்தி வரும் 24 மருத்துவப் பிரதிநிதிகளும், சுகாதாரத்துறை பேருந்தின் மூலம் ஹவுராவில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஊடகங்கள் முன்னிலையில் மருத்துவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்

இந்தநிலையில், முதலமைச்சர் மம்தா உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்ட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் தெரிவித்தனர் இதனையடுத்து மருத்துவர்கள் அனைவரும் தங்களது பணிக்கு திருப்பினர், மருத்துவர்கள் இல்லாமல் அவதிப்பட்டு வந்த நோயாளிகளுக்கு தீர்வு கிடைத்தது.
 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctors withdraws his protest


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!




கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!




Seithipunal