டிக் டாக், ஹலோ ஆப்பை தொடர்ந்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செயலிகளை பயன்படுத்தாதீர்.. அதிரடி காட்டிய இந்திய ராணுவம்.!! - Seithipunal
Seithipunal


ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செயலிகளை பயன்படுத்தார்கள், தங்கள் ஸ்மார்ட் போனிலிருந்து நீக்க வேண்டும் என ராணுவ வீரர்களுக்கு இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்,  ஷேர் சாட், 360 செக்யூரிட்டி, பப்ஜி உள்ளிட்ட 89 செயலிகளை இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் ஸ்மார்ட் போனிலிருந்து நீக்க வேண்டும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தகவல் கசிவதை தடுக்க இந்திய ராணுவம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில்  கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு இந்திய சீன இடையே உறவில் விரிசல் எழுந்துள்ளது. இதனையடுத்து  தங்கள் ராணுவ படையினை லடாக் பகுதியில் இரு நாடுகளும் குவித்து வருகிறது. இது எல்லைப் பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. 

இதனிடையே சீன பொருட்களை இந்தியாவில் புறக்கணிக்க வேண்டுமென மக்களிடையே ஒரு பிரச்சாரமாக இருந்து வருகிறது. இருந்த போதிலும் இந்தியாவில் சீன பொருள்களுக்கான விற்பனையானது சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது.  அதேபோல இந்தியாவில் இயங்கிவரும் சீன நாட்டை சேர்ந்த செல்போன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதையடுத்து இந்திய அரசாங்கத்தால் 59 செயலிகள் முன்றிலுமாக தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

do not use facebook and instagram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->