தாய் நாட்டிற்காக உயிர் நீத்த ராணுவ வீரரின் ஆசையை நிறைவேற்ற ராணுவத்தில் சேர்ந்த மனைவி! - Seithipunal
Seithipunal



நம் தாய் நாட்டை காப்பாற்றுவதற்காக, நாட்டில் உள்ள மக்கள் நிம்மதியாக தூங்குவதற்காக தனது குடும்ப உறவுகளை பிறந்து எல்லையில் நின்று நமக்காக உயிரை பணையம் வைத்து நிற்கும் ராணுவ வீரர்களே நாட்டின் தலை சிறந்தவர்கள். நம் நாட்டின் ராணுவ வீரர்களை நினைக்கும்போதே உடல் சிலுர்க்கிறது. தாயகத்திற்காக இதுவரை ஏராளமான வீர இந்தியர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

அதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரசாத் மஹாதிக் என்ற ராணுவ மேஜர் 2017-ம் ஆண்டு இந்திய-சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது தீ விபத்தில் உயிரிழந்தார். தாய் நாட்டிற்காக உயிர் நீத்த ராணுவ மேஜர் பிரசாத் மஹாதிக்கின் மனைவி தனது கணவர் இறந்துவிட்ட நிலையில், அவரும் நாட்டிற்காக ராணுவ பணியை தொடங்க நினைத்தார்.


 

ராணுவ மேஜர் பிரசாத் மஹாதிக் இறந்த வேதனையில் இருந்து மீண்டு வந்த, அவரது  மனைவி கவுரி தனது கணவர் போலவே, தாய்நாட்டுக்காக இராணுவ பணியை மேற்கொள்ளவுள்ளார். இதனால் ராணுவத்தில் சேர்வதற்கான SSB தேர்வை முதன் முறையாக எழுதினார். ஆனால் அதில் தேர்ச்சிபெறவில்லை.

ஆனாலும், விடாப்பிடியாக படித்து  தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றார். இந்தநிலையில், வரும் ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் பயிற்சியில் சேரவுள்ளார். இதனையடுத்து, அடுத்த ஆண்டு லெஃப்டினன்ட் ஆக ராணுவத்தில் இணைகிறார். அவரின் செயல் ஒட்டுமொத்த இந்தியர்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

died Army man wife joined in army


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->