டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் திடீர் திருப்பம்.! விலகிய சங்கங்கள்.! வெளியிட்ட காரணங்கள்.!  - Seithipunal
Seithipunal


டெல்லி விவசாயிகள் சங்க போராட்டத்தில் இருந்து இரண்டு சங்கங்கள் திடீரென விளங்கியதாக அறிவித்துள்ளது. 

குடியரசு தினத்தில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததை தொடர்ந்து, அகில இந்திய கிசான் சங்கர்ஷ் கோ-ஆர்டினேஷன் கமிட்டி எனும் அமைப்பின் வி.எம். சிங் தெரிவித்துள்ளதாவது:-

இந்த வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. விவசாயிகளின் உரிமைக்காக எங்களுடைய போராட்டம் தொடரும். ஆனால், இந்த வழியில் அல்ல." என்று அவர் தெரிவித்துள்ளார். 

பாரதிய கிசான் சங்கத்தின் ஒரு பிரிவும் இந்த விவசாயிகள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பாரதிய கிசான் சங்கத்தின் பிரிவு சார்பில், "இந்த வன்முறை சம்பவங்கள் மிகுந்த கவலையை அளிக்கிறது. 

எல்லையில் நடைபெறும் எங்கள் முற்றுகையை நிறுத்திக் கொள்கிறோம். குடியரசு தினத்தின் போது நடைபெற்ற வன்முறைக்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை. வன்முறையில் ஈடுபட்டவர்கள் சர்தார்கள் அல்ல. கத்தார்(துரோகி)கள்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi protest current situation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->