ஓ.பி.சி. மருத்துவ இட ஒதுக்கீடு விசாரணையில் நீதிபதிகள் பகீர் கருத்து.. அதிர்ச்சியில் மக்கள்..!! - Seithipunal
Seithipunal


இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது. அதனால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் பறிக்கப்பட்டுள்ளன. 

இந்த சமூக அநீதியை எதிர்த்தும், பாதிக்கப்பட்ட பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு நீதி வழங்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பா.ம.க. இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படியும் உச்சநீதிமன்ற பதிவுத்துறையிடம் கோரப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இடஒதுக்கீடு தொடர்பாக பாமக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் தொடுத்த வழக்கின் அடிப்படையில் நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi High court Judge says Quota is not a Fundamental Right


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->