நேபாள விமான விபத்து - ஒரு நாள் துக்கம் அனுசரிக்க முடிவு.! - Seithipunal
Seithipunal


திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்ட எட்டி ஏர்லைன்ஸ் விமானம் நேபாளத்தில் உள்ள பொக்காரா விமான நிலையத்தில் நான்கு விமான ஊழியர்கள் மற்றும் 68 பயணிகளுடன் வந்து தரையிறங்கும் போது ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதால் திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. 

இதில், 32 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது, இந்த விபத்தில் இதுவரை 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  

இந்த சம்பவம் குறித்து எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் சுதர்சன் பர்தாவுலா தெரிவித்ததாவது, "இரண்டு கைக்குழந்தைகள் உட்பட 10 வெளிநாட்டினர்கள் அந்த விமானத்தில் இருந்தனர். 

மேலும் 53 நேபாளிகள், 5 இந்தியர்கள் 4 ரஷியர்கள், அர்ஜென்டினா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தலா ஒருவர் என்று மொத்தம் 67 பேர் விமானத்தில் பயணித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மீட்பு பணிகள் கடினமாக உள்ளது என்று நேபாள பத்திரிகையாளர் திலீப் தாபா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

decide observe mourning nepal for flight fire accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->