ஒரே நாளில் எகிறிய கொரோனா தொற்று எண்ணிக்கை.?! இந்தியாவில் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கிறதா.?! - Seithipunal
Seithipunal


கடந்த 2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளில்  கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் மக்களின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு இந்த தொற்றுக்கான தடுப்பூசிகள்  கண்டறியப்பட்ட பின்னர் கோவிட் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.

தற்போது இந்தியாவில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் கொரோனா தொற்று மீண்டும் வேகம் எடுத்துள்ளது நாட்டு மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. நேற்று மட்டும் நாடு முழுவதும் 1805 பேருக்கு  கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருவோரின் எண்ணிக்கை 10,300 ஆக அதிகரித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 937 குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று விகிதம் 3.19% ஆக இருக்கிறது. 134 நாட்களுக்குப் பிறகு சிகிச்சையில்  இருப்பவர்களின் எண்ணிக்கை 10000 தொட்டிருப்பது இதுவே முதல் முறை. மேலும் கொரோனாவிற்கு இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

covid 19 caes got a high raise in india


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->