மைசூர் : கிறிஸ்துவ பாதிரியார் இல்லத்தை இடிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு நகர் பெங்களூரு நீலகிரி சாலையில் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் தங்கும் இல்லம் ஒன்று அமைந்துள்ளது. 

இதைத் தொடர்ந்து, புதிய கிறிஸ்துவ பாதிரியார்கள் இல்லம் மைசூரு நெல்சன் மண்டேலா சாலையில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீலகிரி சாலையில் உள்ள பழமையான பாதிரியார் இல்லத்தை இடிக்க வேண்டும் என்று தற்போது பொறுப்பில் இருக்கும் பாதிரியார் வில்லியம்சன் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி, இருபது சதவீத கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. 

ஆனால், இதற்கு கிறிஸ்துவ கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, மைசூர் நீதிமன்றத்தில் தடை விதிக்க கோரி மனு ஒன்றையும் அளித்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அந்த உத்தரவில், பாதிரியார் இல்லம் தொடர்பான இறுதி கட்ட உத்தரவு வரும் வரை, அந்த இல்லத்தை இடிக்க கூடாது என்று தடை விதித்தார். இதை தொடர்ந்து கட்டிடம் இடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது. 

மேலும், அந்த பாதிரியார் இடத்தில் போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நீதிமன்ற உத்தரவிற்கு கிறிஸ்துவ கூட்டமைப்பினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

court stay order on chiristian priests house demolition in mysore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->