தம்பதியினரின் உயிரை பறித்த கிரெடிட் கார்டு - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் கீசாரா பகுதியைச் சேர்ந்தவர்கள் ரகுலா சுரேஷ்குமார் - பாக்யா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இந்தத் தம்பதியினர் கிரெடிட் கார்டை பயன்படுத்தி 8 லட்ச ரூபாய் வரை கடனாக வாங்கி வீடு கட்டியுள்ளனர். ஆனால், இந்தக் கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் தம்பதியினர் அவதிப்பட்டுள்ளனர்.

மேலும், கிரெடிட் கார்டு நிறுவனங்களும் அடிக்கடி வீட்டிற்கு வந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அந்த வகையில், கடனை வசூலிக்க வந்த கிரெடிட் கார்டு நிறுவனத்தினர் தம்பதியினரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். 

இதனால் மனமுடைந்த பாக்யா விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதேபோல், அவரது கணவர் ரகுல்லா சுரேஷ்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தம்பதியினரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couples sucide in telangana for not pay credit card loan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->