காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதியை அறிவித்தார் சோனியா! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார் தற்காலிக தலைவர் சோனியா காந்தி!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இறந்து வருகிறார் தலைவர் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பாணையை இன்று சோனியா காந்தி வெளியிட்டுள்ளார்.

அதன்படி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பமான தாக்கல் வரும் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். வேட்டுமனு திரும்பப் பெற வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி கடைசி நாள் அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் அக்டோபர் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை காங்கிரஸ் கட்சியின் தலைவர் காண வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழக காங்கிரஸ் உட்பட சில மாநில கட்சிகள் மீண்டும் ராகுல் ஐயா காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர்.

ஆனால் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கேலார் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என காங்கிரஸ் வட்டாரங்கள் பேசப்படுகிறது.

அதே சமயத்தில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஒரே ஒருவர் என போட்டிடுவார் என்றும் அதன் காரணமாக வாக்குப்பதிவியின்றி அனைவராலும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என சொல்லப்படுகிறது இதை உணர்த்தும் விதமாக தமிழகம் ராஜஸ்தான் உட்பட சில மாநில காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியை தலைவராக தேர்ந்தெடுக்கும்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

ராகுல் காந்தி நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார் இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்பட்டவுடன் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணியை காங்கிரஸ் தொடங்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Party National President Election Date Announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->