பதவியை ராஜினாமா செய்தார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிருபத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக இன்று காலை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வந்த கவுரவ் வல்லப் தனது அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வல்லப் எழுதிய கடிதத்தில், "நான் காங்கிரசில் சேர்ந்தபோது இளைஞர்கள், மூத்த நிர்வாகிகளின் யோசனைகளை மதிக்கும் நாட்டின் பழமையான கட்சி என்று நான் நம்பினேன்.

ஆனால் சில காலமாக, புதிய சிந்தனைகள் கொண்ட இளைஞர்களால் கட்சியில் அனுசரித்துச் செல்ல முடியவில்லை என்று சில காலமாக உணர்ந்தேன். இளைஞர்களிடம் புதிய சிந்தனைகள் உள்ளன. திசையில்லா பாதையை நோக்கி காங்கிரஸ் சென்று கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரசால் செயல்பட முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- "திசையில்லா பாதையை நோக்கி காங்கிரஸ் சென்று கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. சனாதனத்துக்கு எதிரான கருத்துகள் கூறவோ, நாட்டை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்பவர்கள் குறித்து அவதூறு கூறவோ என்னால் முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass gourav vallabh resign posting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->