கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா நாளை தாக்கல்.! 10 ஆண்டு சிறை, 5 லட்சம் ரூபாய் அபராதம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களும், ஏழை மக்களும் அதிக அளவில் கிறிஸ்துவ மதத்திற்கு கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்படுவதாக, அம்மாநில அரசுக்கு  புகார்கள் வந்தது.

இதனை அடுத்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர முடிவு எடுத்தார். கர்நாடக முதல்வரின் இந்த முடிவுக்கு கிறிஸ்துவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, இந்த முடிவை முதலமைச்சர் கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஆனால் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, வரும் 20ஆம் தேதி (நாளை) கட்டாய மதமாற்ற தடை சட்டம் மசோதாவை, சட்டப் பேரவையில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

மேலும் இந்த சட்டத்தின்படி மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு குறைந்த பட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் தாழ்த்தப்பட்ட மக்களையும், 18 வயதிற்கு குறைவானவர்கள், ஏழை பெண்களையும் மதமாற்றம் செய்தால், அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க இந்த சட்ட மசோதா வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் நாளை கட்டாய மதமாற்றத் தடை சட்ட மசோதா தாக்கல் செய்ய உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Compulsory Conversion Prohibition Bill IN KARNATAKA


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->