கல்லூரியில் காதலியை கத்தியால் குத்திவிட்டு காதலன் தற்கொலை.!! - Seithipunal
Seithipunal


கல்லூரியில் காதலியை கத்தியால் குத்திவிட்டு காதலன் தற்கொலை.!!

டெல்லி மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் இளநிலை சமூக அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் அஞ்சு சிங் அதே வகுப்பைச் சேர்ந்த நேஹா என்ற மாணவியைக் காதலித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து இருவரும் இன்று, பல்கலைக்கழகத்தின் கேன்டினில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த அஞ்சு தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காதலி நேஹாவை சுட்டுள்ளார்.

இதனால், நேஹா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர், அஞ்சு அங்கிருந்து சென்று கல்லூரியில் உள்ள விடுதியில் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student sucide after kill girl friend in delhi


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->