அசத்தும் கல்லூரி! மொத்தம் 2400 இடங்கள்! ஒரு ரூபாய் தான் கட்டணம்!  - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், அதிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து உள்ளது. இறப்பு விகிதமும் இந்தியாவில் குறைவு.

இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடும் பொருளாதார நெருக்கடியில் இந்திய மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் நைஹாட்டியில் உள்ள ரிஷி பங்கிம் சந்திரா கல்லூரி நிர்வாகம், மாணவர் சேர்க்கைக்கு ஒரு ரூபாய் கட்டணமாக நிர்ணயித்து பெற்றோர்களின் சுமையை குறைத்துள்ளது. இந்த கல்லூரியில் அனைத்து பாடப்பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 2400 இடங்கள் உள்ளது.

அந்த கல்லூரியின் முதல்வர் டாக்டர் சஞ்சிப் சஹா, நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், "கொரோனா தொற்றால் பெற்றோர் பலர் நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். இதனால் அனைத்து பட்டப் படிப்புக்களுக்கான சேர்க்கைக் கட்டணம் ஒரு ரூபாயாக நிர்ணயித்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

collage admission fees 1 rupee


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->