திரிபுரா சட்டசபைத் தேர்தல் - 832 வாக்குகள் வித்தியாசத்தில் முதலமைச்சர் மாணிக் சாஹா வெற்றி.! - Seithipunal
Seithipunal


60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா மாநில சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கூட்டணி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் போட்டியிட்டுள்ளனர். 

இந்த நிலையில் இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் கட்சியான பாஜக முன்னிலை பெற்று வருகிறது. மற்ற கூட்டணி கட்சிகளும் முன்னிலை வகித்த வண்ணம் உள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் மாநிலத்தில் பல தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. அதற்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று மற்ற கட்சியினரும் பின் தொடர்ந்தே வருகின்றனர். 

இந்த தேர்தலில் பாஜக சார்பில் டவுன் போர்டோவாலி தொகுதியில் போட்டியிட்ட திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சாஹா 832 வாக்குகள் முன்னிலையில் வெற்றிப் பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm manik saha won assembly election in tripura


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->