சிவில் சர்வீஸ் தேர்வர்கள் கவனத்திற்கு.. கட்டணம் இல்லா பயிற்சி பெற இன்று நுழைவு தேர்வு.!
Civil service free tution entrance exam today
2022 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான அட்டவணையை யூபிஎஸ்சி வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் நடந்து முடிந்தது.
இந்த நிலையில் அடுத்த வருடத்திற்கான சிவில் சர்வீஸ் தேர்வு 2023 மே 28ம் தேதி நடைபெற உள்ளது. எனவே, சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு கட்டணம் இல்லா பயிற்சி அளிப்பதற்கான நுழைவு தேர்வு இன்று (நவம்பர் 13) நடைபெறுகிறது.

எனவே, தேர்வு எழுதுபவர்கள் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
English Summary
Civil service free tution entrance exam today