ஒன்றரை வருடத்தில் 100 வீடுகள் கொண்ட கிராமம்... எல்லையில் சர்ச்சையை கிளப்பும் சீனா.! - Seithipunal
Seithipunal


இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. மேலும், கடந்த வருடத்தின் போது லடாக் எல்லையில் இரண்டு நாட்டு இராணுவ வீரர்களும் மோதிக்கொண்டதில், இருதரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டது. இந்தியா சேத விபரத்தை அதிகாரபூர்வமாக வெளியிட்ட நிலையில், சீனா இன்றுவரை தனது இழப்பை அறிவிக்கவில்லை. 

எல்லை விவகாரம் தொடர்பாக பல பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும், சீனா பின்வாங்காமல் தயக்கம் காண்பித்து வருகிறது. இந்நிலையில், லடாக் எல்லையை போன்று அருணாச்சல பிரதேசத்தின் எல்லையிலும் பிரச்சனை நீடித்து வருகிறது. 

அங்குள்ள சுபான்ஸ்ரீ மாவட்டத்தின் டிசாரி சூ ஆற்றங்கரையில் சீனா 101 வீடுகள் கொண்ட கிராமத்தை காட்டியுள்ளது. இந்திய பகுதியுடன் 4.5 கிமீ தூரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது, இந்தியாவிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் வரை குறிப்பிட்ட இடத்தில் வீடுகள் இல்லாத நிலையில், கடந்த நவம்பர் மாதம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்திய அரசும் எல்லையில் பாலங்கள், சாலைகள் போன்ற முக்கிய கட்டமைப்பை அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் செயல்பாடு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China Make Village at Arunachal Border Near India


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->