இஸ்ரோவிற்கு போட்டியாக களமிறங்கும் நாடு..! சாமர்த்தியமா? சாதனையா?..!! - Seithipunal
Seithipunal


இந்திய நாடு தற்போது விண்வெளி துறையில் தனது கடுமையான முயற்சியால் அபரிதமான வளர்ச்சியை கண்டு வரும் நிலையில்., இந்தியாவின் வளர்ச்சியை கட்டுக்குள் வைக்க சீனாவும் வணிக ரீதியிலான ராக்கெட்டுகளை இயக்க முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பை சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

மேலும்., இந்தியா உலக நாடுகளை சந்திராயன் 1 மற்றும் சந்திராயன் 2 மூலமாக பிரமிக்க வைத்தது. இதனையடுத்து உலக நாடுகளின் கவனத்தை இந்தியாவின் மீது திரும்பி பார்க்க வைக்கப்பட்ட நிலையில்., இதனால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக இந்திய விண்வெளி துறையில் பலமடங்கு உயர்ந்துள்ளது. 

அடுத்தடுத்து உலகளவில் வியக்கவைக்கும் தொடர் சாதனைகள்., சீன நாட்டிற்கு கடுமையான வயித்தெரிச்சலாக இருந்து வந்தது. இந்தியா நிலவிற்கான ஆராய்ச்சி மற்றும் சோதனையில் ஒரு புறம் ஈடுபட்டு வந்தாலும்., மற்றொரு புறத்தில் வர்த்தக ரீதியிலும் வளர்ச்சியை கண்டு லாபம் கண்டு வருகிறது.

கடந்த 2017 ஆம் வருடத்தில் 104 செயற்கைக்கோளை விண்ணிற்கு எடுத்து சென்று சாதனை படைத்த இஸ்ரோவின் செயல்பாடு சீனாவிற்கு பெரும் கடுப்பை கிளம்பியதை அடுத்து., இந்த திட்டத்தில் சீனாவும் களமிறங்கியுள்ளது. 

இதனையடுத்து புதிய ரக ராக்கெட் ஒன்றை தயாரித்து., அதில் செயற்கைக்கோளை ஏந்தி செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளகதவும்., மிக அதிக எடையுள்ள பொருட்களை தாங்கி செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்., இது திட மற்றும் திரவ எரிபொருளில் இயங்கும் என்றும்., இதற்காகும் செலவை மக்களிடம் வரியாக பெறவும் திட்டம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

china make try to compete ISRO India


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->