சந்திரபாபு நாயுடு மீது பாய்ந்த 15 வழக்குகள்: மனுதாக்கல் செய்வதில் சிக்கலா? - Seithipunal
Seithipunal


ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதே போல் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் மற்றும் அவரது மனைவியும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் பிரசாரத்தின் போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தெரிவித்து சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் லோகேஷ் மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆந்திராவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இதனால் தங்கள் மீதான வழக்குகளால் தேர்தலில் மனுதாக்கல் செய்ய ஏதாவது சிக்கல் ஏற்படுமா என வழக்கறிஞர்கள் மூலம் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrababu Naidu against 15 cases registered


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->