ராஜஸ்தான், மே.வங்க பாலியல் குற்றங்களுக்கு எப்போ வாய் திறப்பீங்க? மத்திய அமைச்சர் ஆவேச பேட்டி! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறி, சுமார் 80 நாட்கள் நீடித்துள்ளது. 

இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப்பட்டுள்ளனர். 

மே மாதம் இரு பெண்கள் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட காணொளி அண்மையில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், மணிப்பூர் விவகாரத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று, நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக்குகின்றன என்று, மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், திரிணாமுல் ஆளும் மேற்கு வங்கம், நிதிஷ் குமார் ஆளும் பிஹார் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கொடூரக் குற்றங்கள் மிகப் பெரிய எண்ணிக்கையில் நடந்துள்ளது. 

ஆனால், இந்த மாநில பாலியல் வன்கொடுமை குற்ற விவகாரங்களில் காங்கிரஸ் தலைவர்கள் அமைதி காக்கிறார்கள்" என்று அனுராக் தாக்குர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Minister Condemn to Opposite party leaders


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->