நினைவுச் சின்னங்களை திறக்க அனுமதி.. மத்திய அரசு அறிவிப்பு.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து வந்தது. இதனால் நாடுதழுவிய ஊரடங்கு ஆறாவது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பானது 605,220 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 17,848 ஆக உயர்ந்துள்ளது.. கொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணிகளில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகிறது.

வரலாற்று நினைவு சின்னங்களை திறப்பது தொடர்பாக மத்திய அரசு தற்போது கட்டுப்பாடுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று நினைவு சின்னங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களை ஜூலை 6 ஆம் தேதி முதல் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜூலை ஆறாம் தேதி முதல் உரிய கொரோனா தடுப்பு வழிமுறையை பின்பற்றி திறக்குமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt permission for opening Souvenirs


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->