ஓட்டுனர்களுக்கு குட் நியூஸ்.. இனி லாரி கேபின்களில் ஏசி கட்டாயம்.. மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் அத்யாவசிய பொருட்களை ஏற்றி செல்ல பெரும்பாலும் லாரிகள் பயன்படுத்தப்படுகிறது. லாரிகளில் சரக்குகளை கையாள்வதால் பல்வேறு அடிப்படை வசதிகள் இருக்காது. லாரி  ஓட்டுனர்கள் உட்காரும் கேபினில் ஒரு டிரைவர் வாகனத்தை ஓட்ட ஒரு கிளினர் உட்கார்ந்து வரும் அளவுக்கு இட வசதி இருக்கும்.

வெயில் காலத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் லாரி டிரைவர்கள் இரவில் சாலையோரம் நிறுத்தி ஓய்வெடுக்கக்கூட முடியாது. ஏனெனில் கொசு தொல்லை, புழுக்கம் அதிகமாக இருக்கும். மிக கடினமான பணியை லாரி ஓட்டுநர்கள் செய்து வருகிறார்கள். லாரிகளில் வரும் அதிக வெப்பம் காரணமாக லாரி டிரைவர்களின் ஆரோக்கியத்திலும் பாதிப்பு ஏற்படும்.

இந்த நிலையில் இந்தியாவில் ஓடும் அனைத்து லாரிகளிலும் ஓட்டுநர் கேபினில் ஏசி வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் விற்பனைக்கு வரும் லாரிகளில் ஏசி கேபின் வசதியை கட்டாயமாக்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இது குறித்து பேசிய அமைச்சர் நிதின் கட்காரி "இந்தியாவில் லாரி ஓட்டுநர்கள் தினத்துக்கு 14 மணி நேரம் வரை தொடர்ந்து வாகனம் ஓட்டுகின்றனர். லாரிகளில் 47 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பம் தகிக்கும் கேபினில் அவர்கள் தினமும் பயணிக்கின்றனர். இதனால் ஓட்டுநர்களின் ஆரோக்கியம் பாதிக்கிறது. மேலும் விரைவில் அவர்கள் களைப்படைவதால் விபத்துகள் நேரிடவும் வாய்ப்பாக உள்ளது. இவற்றைத் தவிர்க்க இனி லாரி கேபினில் ஏசி வசதி கட்டாயமாக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு முதல் சாலை போக்குவரத்து அமைச்சகம் இதற்கு முயற்சி செய்தது. ஆனால் வாகன உரிமையாளர்கள் தரப்பில் எதிர்ப்பும் எழுந்ததால் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நீண்ட ஆண்டுகளுக்கு பின் இந்த உத்தரவு அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. இதனை உடனடியாக அமல்படுத்துமாறு அமைச்சகம் தெரிவித்த போதிலும், வாகன உற்பத்தியாளர்கள் தரப்பில் ஒன்றரை வருட அவகாசம் கேட்டுள்ளனர்.

இதன் மூலம் 2025 முதல் இந்தியாவின் அனைத்து லாரிகளும் ஏசி வசதியுடன் இயங்கத் தொடங்கும். அதே வேளையில் ஏசி வசதி காரணமாக லாரிகளின் விலையில் சுமார் ரூ20 ஆயிரம் வரை உயரவும் வாய்ப்பு இருப்பதால் லாரி வாடகையும் உயரக்கூடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt notify making AC mandatory in lorry cabins


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->