கட்டாய மதமாற்றம் அடிப்படை உரிமை ஆகாது! மத்திய அரசு பதில் மனு தாக்கல்! - Seithipunal
Seithipunal


பாஜகவை சேர்ந்த மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபத்யாயா கட்டாய மதமாற்றத்தை தடுக்க உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் நாட்டில் பல பகுதிகளில் கட்டாய மதமாற்றம் நடைபெறுகிறது. பிற மதங்களைச் சேர்ந்தவர்களை தூண்டுதல், ஏமாற்றுதல், அச்சுறுத்தல் போன்ற சம்பவம் வாயிலாக மதமாற்றங்கள் நடைபெறுகின்றன. 

அதேபோன்று பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுத்து கட்டாய மதமாற்றம் நடக்கிறது. இது போன்ற சம்பவங்கள் தேசிய அளவில் பெரும் பிரச்சனையாக உள்ளது. பிற மதத்தினரை பில்லி, சூனியம், மூடநம்பிக்கை ஆகியவற்றின் மூலமாக கட்டாய மதமாற்றம் நடக்கிறது. இதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்றம் கட்டாய மதமாற்றம் மிக தீவிரமான பிரச்சனையாக உள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஆகவும் உள்ளது. இதனைதடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மதமாற்றம் செய்வதை தடுக்க மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் மத சுதந்திரம் என்ற பெயரில் வேற்று மதத்தினரை மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமை ஆகாது. இது மோசடி ஏமாற்றுதல் வற்புறுத்துதல் அல்லது பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்து மதமாற்றுவதற்கான உரிமையை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

கட்டாய மதமாற்றத்தை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போதைய மனுவில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகளை மத்திய அரசு கருத்தில் எடுத்துக் கொண்டு பரிசீலிக்கும். மனுதாரர் கூறியுள்ள பிரச்சனையின் தீவிரத்தை மத்திய அரசு உணர்ந்துள்ளது என மத்திய அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt filed reply petition Forced conversion not fundamental right


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->