குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் மார்ச் 31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு தானிய பொருட்களை பெறுவதற்கு ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும். 

கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் சுமார் 8 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், கால அவகாசம் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவையான ஆவணங்கள், குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆதார் ஜெராக்ஸ், ரேஷன் கார்டு ஒரிஜினல் மற்றும் நகல் மேற்கூறிய ஆவணங்களை அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று  சமர்ப்பித்து ஆதார் கார்டு ரேஷன் கடை இணைத்துக்கொள்ளலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt announcement for smart card aadhar link


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->