சட்ட விரோத செயலிகளை இனைக்கக் கூடாது - பிளே ஸ்டார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


சட்ட விரோத செயலிகளை இனைக்கக் கூடாது - பிளே ஸ்டார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.!

பொதுமக்கள் தங்களது செல்போன்களில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் பிளே ஸ்டோர்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக இந்த இரண்டு ப்ளே ஸ்டோர்களிலும் புதிய புதிய செயலிகள் இணைந்து கொண்டே உள்ளன. 

அவ்வாறு இணையும் செயலிகளில் கடன் செயலிகள், சூதாட்ட விளையாட்டு செயலிகள் உள்ளிட்டவை பொதுமக்களை எளிதில் கவர்ந்து அவர்களை தங்கள் வலையில் சிக்க வைக்கின்றன. 

இதனால் பொதுமக்கள் தங்கள் பணத்தை இழந்தும், கடன் நெருக்கடிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள். இது தொடர்பான புகார்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து சென்ற வண்ணமே உள்ளன. 

இந்நிலையில், மத்திய அரசு பாதுகாப்பற்ற செயலிகளை இணைக்கக்கூடாது என்று இரண்டு பிளே ஸ்டார் நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய தகவல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்தெரிவித்துள்ளதாவது:-

 "கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இந்தியர்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. ஆகவே, இந்த இரண்டு பிளே ஸ்டோர்களில் சட்டவிரோத மற்றும் பாதுகாப்பற்ற செயலிகளை இணைக்கக்கூடாது. 

கடன் வழங்கும் நிறுவனங்களை தொடர்ந்து கவனித்து வருகிறோம். இணையத்தை பாதுகாத்து மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதே அரசின் நோக்கமாக உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central government warned goolgle and apple play store companies


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->