நாட்டில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறதா? - மத்திய அரசு விளக்கம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 2019 ஆம் ஆண்டிலேயே 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடிப்பது நிறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால், மக்கள் அனைவரும் திண்டாடினார்கள். அதன் பின்னர் 1000 ரூபாய் நோட்டிற்கு பதிலாக பிங்க் நிறத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்தது.

இந்த புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த சில நாட்களிலேயே அதிகளவிற்கு அச்சடிக்கப்பட்டதால் கடந்த 2019 ஆம் ஆண்டு அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மாநிலங்களவையில் கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் குறைந்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.

அதில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது:- "தற்போது நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகள் போதுமானதாக உள்ளது. அதனால், புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் எதுவும் தற்போது இல்லை. கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே 2000 நோட்டுகள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central government said 2000rs notes printing stoped india in 2019


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->