30 இடங்களில் புகுந்த சிபிஐ அதிகாரிகள்!! முன்னாள் #முதல்வர் இல்லத்தில் நடந்த அதிரடி சோதனை!!  - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலத்தின் முதல்வராக கடந்த 2014ம் ஆண்டு முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா அவர்களின் வீடு மற்றும் அலுவகங்கள் உட்பட 30 இடங்களில் நில ஆக்கிரமிப்பு வழக்கு தொடர்பாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

காங்கிரஸ் கட்சியிற் சேர்ந்த இவர் அம்மாநில நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார். அச்சமயத்தில் இவர் மீது சிபிஐ மூலம் தொழில் பேட்டைகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக  குற்றம் சாட்டப்பட்டது.

மாநில போலீசார் கடந்த செப்.1ம் தேதி, முதன்மைச் செயலாளராக இருந்த ஷட்டார் சிங், ஹுடா மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் 2 பேர் என 4 பேர் மீது 14 பேருக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ்,வழக்குப் பதிவு செய்தனர்.

ஏற்கெனவே இது தொடர்பாக சிபிஐ பூபிந்தர் சிங் மற்றும் ஹூடா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளது. ஆனால், தற்பொழுது பூபேந்தர் சிங் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI ride in hariyana ex CM house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->