உயரும், பேருந்து கட்டணம்.! பொதுமக்களுக்கு முதல்வர் கொடுத்த ஷாக்.!  - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் சூப்பர் ஹீரோவாக ஆட்சியை நடத்தி வருபவர் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. ஆட்சிக்கு வந்த நாள் முதலே பல அதிரடியான திட்டங்களை செயல்படுத்தி மக்களிடையே பிரபலமானார். மேலும், தமிழகத்திலும் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கின்றது. ஆட்சிக்கு வந்த புதிதில் மதுவிற்பனை கடைகள் குறைப்பு, ஒரே நாளில் 1.26 லட்சம் பேருக்கு வேலை என ஜெகன் மோகன் ரெட்டி மக்களின் மனங்களில் இடம் பிடித்தார்.

ஆந்திராவில் இயங்கிவரும் மதுக்கடைகளின் உரிமையை ரத்து செய்யும்படி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மதுக்கடைகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Image result for JEGAN MOHAN REDDY SEITHIPUNAL

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்த முடிவு செய்து இருக்கின்றது. ஆந்திர பிரதேச போக்குவரத்து கழகத்துக்கு ஆண்டு தோறும் செயல்பாட்டு நஷ்டம் அதிகரித்து வருகின்றது. எனவே, நஷ்டத்தை குறைக்கும் பொருட்டு பேருந்து கட்டணத்தை உயர்த்த நேற்று போக்குவரத்து கழகம் முடிவு செய்தது. 

பல்வேறு பஸ் சேவைகளை பொறுத்து கி.மீட்டருக்கு 10 முதல் 20 காசுகள் வரை பேருந்து கட்டணம் உயருகிறது. இதுகுறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் பெர்னி வெங்கட்ராமையா, " ஒவ்வொரு ஆண்டும் செயல்பாட்டு நஷ்டமானது அரசுக்கு அதிகரித்து கொண்டே இருக்கின்றது. எனவே, கட்டணத்தை உயர்த்துவதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை." என்று கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BUS TICKET RATE HIKE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->