அதிரடியாக உயர்ந்த பேருந்து கட்டணங்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தில் அரசு பேருந்துகளின் கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதற்கு அம்மாநிலத்தின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த கட்டண உயர்வு வரும் ஜனவரி 5ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மாநில போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அதனால் பயணசீட்டு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bus ticket price increase in karnataga


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->