இந்தியாவில் புல்லட் ரயில் – அதிவேக கனவு நிஜமாகுமா?
Bullet train in India high speed dream come true
இந்தியாவின் மிகப்பெரிய கனவு திட்டமான புல்லட் ரயில் திட்டம் வேகமாக முன்னேறி வரும் நிலையில், இதன் முன்னேற்றம் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புல்லட் ரயில் சேவையை நாடு முழுவதும் விரிவாக்க இந்திய ரயில்வே தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மும்பை - ஹைதராபாத் - பெங்களூரு புல்லட் ரயில் திட்டம்!
இந்த திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக, ஹைதராபாத் - மும்பை இடையே 709 கிலோமீட்டர் நீளமுள்ள அதிவேக ரயில் பாதை அமைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதேபோல், ஹைதராபாத் - பெங்களூரு மற்றும் ஹைதராபாத் - சென்னை போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் புதிய புல்லட் ரயில் வழித்தடங்களும் பரிசீலனை செய்யப்படுகிறது.
ஹைதராபாத் - பெங்களூரு புல்லட் ரயில்:
- தற்போதைய பயண நேரம் சுமார் 11 மணி நேரம் (சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்).
- வந்தே பாரத் மூலம் 8.5 மணி நேரம் ஆகும்.
- புல்லட் ரயில் வந்தால் வெறும் 2 மணி நேரமாக குறையும்!
ஹைதராபாத் - சென்னை புல்லட் ரயில்:
- தற்போதைய பயண நேரம் 15 மணி நேரம் (எக்ஸ்பிரஸ் ரயில்கள்).
- புல்லட் ரயில் வந்தால் வெறும் 2.5 மணி நேரமாக குறையும்!
திருச்சி - சென்னை புல்லட் ரயில்:
- 330 கிமீ தூரத்தை வெறும் 1 மணி நேரத்தில் கடக்கும்!
மும்பை - அகமதாபாத் முதல் அதிவேக திட்டம்!
நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டமான மும்பை - அகமதாபாத் பாதை, ஜப்பான் தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் வெற்றியை தொடர்ந்து, மும்பை - ஹைதராபாத் - பெங்களூரு - சென்னை போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் அடுத்த கட்ட புல்லட் ரயில் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன.
10 - 13 ஆண்டுகள் செலவாகலாம்!
இந்த புதிய புல்லட் ரயில் திட்டங்கள் முழுமையாக செயல்பட, 10 முதல் 13 ஆண்டுகள் ஆகும் என இந்திய ரயில்வே அதிகாரிகள் கணித்துள்ளனர். இருப்பினும், இது நிறைவு பெற்றால் இந்தியாவில் பயண நேரம் தாராளமாக குறைந்து, போக்குவரத்து வளர்ச்சியில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்பது உறுதி!
English Summary
Bullet train in India high speed dream come true