140 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றும் பட்ஜெட்...! - பிரதமர் மோடி பாராட்டு - Seithipunal
Seithipunal


2026–27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பல துறைகளை உள்ளடக்கிய முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்ற இந்த பட்ஜெட் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது கருத்தை வெளியிட்டு, பட்ஜெட்டை பாராட்டியுள்ளார்.அவர் தெரிவிக்கையில், “இந்த மத்திய பட்ஜெட் 140 கோடி இந்தியர்களின் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கிற்கு இது வலுவான அடித்தளமாக இருக்கும். சிறப்பான திட்டங்கள் மற்றும் முன்னோக்குப் பார்வையுடன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் சாதனை படைத்துள்ளார்.

குறிப்பாக இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்தி, அவர்களை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் பட்ஜெட்டாக இது அமைகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

budget fulfills dreams 140 crore people Prime Minister Modi praises


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->