"நீண்டக்கால பகையின் சோக முடிவு..." நில தகராறில் சகோதரர்கள் படுகொலை... குஜராத்தில் பதற்றம்.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் நில தகராறு காரணமாக இரண்டு சகோதரர்கள் வேற்று சமூகத் தவறாள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

குஜராத் மாநிலத்தின் சமத்ஹியல்  கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அலல்ஜி பர்மர்(60)  மற்றும் இவரது சகோதரர் மனோஜ் பர்மர்(54), இவர்களுக்கு அதே கிராமத்தில் விளைநிலம் ஒன்று இருக்கிறது. அந்த விளைநிலம் தொடர்பாக இவர்களுக்கும் அமர்பாய் கூச்சர் என்பவருக்குமிடையே நீண்ட காலமாக பகை நிலவி வருகிறது.

நீதிமன்ற தீர்ப்பின்படி இந்த நிலம் அலல்ஜி  பர்மர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தான் சொந்தம் என தீர்ப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை அலல்ஜி பர்மர்  தனது குடும்பத்தினருடன் நிலத்தில் உழவுப் பணிகளை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த அமர் பாய் கூச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூர்மையான ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர். இந்த சம்பவத்தில் அலல்ஜி பர்மர் மற்றும் அவரது சகோதரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பெண்கள் மற்றும் டிராக்டர் போன்றவற்றிற்கு பலத்தை சேதம் ஏற்பட்டது. இதில் கொலை செய்யப்பட்ட பர்மர் சகோதரர்கள் தலித் தொகுப்பை சேர்ந்தவர்கள்  மேலும் கொலை செய்த அமர் பாய் உயர் ஜாதியை சேர்ந்தவர் என்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலை வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brothers killed in land dispute Tension in Gujarat


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->