சிறுவனுக்கு எமனாக வந்த தண்ணீர் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பையின் பலஸ்பே பகுதியில் வசிக்கும் பத்து வயது சிறுவன் ஒருவர் நேற்று மாலை, வீட்டில் சிறிய பந்து ஒன்றை வைத்து விளையாடி கொண்டு இருந்துள்ளார். 

அப்போது, வீட்டில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளி ஒன்றில் சிறுவனின் பந்து விழுந்து விட்டது. அந்த பந்தை  எடுக்கும் முயற்சியில் சிறுவன் ஈடுபட்ட போது, எதிர்பாராதவிதமாக தவறி உள்ளே விழுந்தான். 

விழுந்த வேகத்தில் வாளியின் குறுகலான அடிப்பகுதியில் சிறுவனின் கால்கள் மாட்டிக்கொண்டுள்ளது. இதில், சிறுவன் தண்ணீரில் மூழ்கி மூச்சு விடுவதற்கு தடுமாறித் தவித்துள்ளார். 

இதற்கிடையே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த மகனைக் காணவில்லை என்று சிறுவனின் தாய் தேடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீர் நிரப்பப்பட்ட வாளியில் மூழ்கியபடி கிடந்த மகனை பார்த்து கதறி அழுதுள்ளார்.

இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy died for drowned buget water in maharastra


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->