மும்பையை கதிகலங்க வைத்த வெடி குண்டு மிரட்டல் - தீவிர சோதனையில் போலீசார்.!
bomb threat to mumbai hospitals and muncipality in mumbai
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பெருநகர மாநகராட்சி தலைமையகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் தலைமையகம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று குறிபிடபட்டிருந்தது.
இதையடுத்து மும்பை போலீசார் அந்த பகுதிக்கு விரைந்துச் சென்று, தலைமையகத்தை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிர சோதனை செய்ததில், சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இருப்பினும் போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னை, பாட்னா மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட 41 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு இருந்தது. தீவிர சோதனைக்கு பின்னர் இந்த மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், மும்பை முழுவதும் உள்ள ஐம்பது மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் வழியே வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதனை மும்பை போலீசார் உறுதிப்படுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில் மர்ம நபர்கள் வி.பி.என். நெட்வொர்க்கை பயன்படுத்தி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு உள்ளன என்று தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள இந்துஜா வர்த்தக கல்லூரிக்கும் நேற்று இரவு மின்னஞ்சல் வந்தது. அதில், கல்லுரியை வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவோம் என மிரட்டல் விடப்பட்டு இருந்தது. இதையறிந்த, உள்ளூர் போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழு உள்ளிட்டோர் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். எனினும், சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை.
English Summary
bomb threat to mumbai hospitals and muncipality in mumbai