ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: நடுவானில் பறந்த போது அதிர்ச்சி..!
Bomb threat to Air India Express flight during mid flight
மும்பையில் இருந்து வாரணாசிக்கு பயணிகளுடன் நடுவானில் பறந்து சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மிரட்டல் குறித்து உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழுவுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், விமானம் வாரணாசி விமான நிலையத்தில் பாதுகாப்பான ஒரு இடத்தில் அவசரமாக இறக்கப்பட்டது.
உடனடியாக, பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் இறக்கிவிடப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில், ஏற்கனவே தயாராக இருந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழு, விமானத்தை சோதனையிட்டதில், விமானத்தின் உள்ளே எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது வெறும் வதந்தி என தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'வாரணாசி செல்லும் எங்கள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழு உதவியுடன் வாரணாசியில் விமானம் தரையிறங்கியவுடன் சோதனை நடத்தப்பட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, மும்பை, டில்லி, சென்னை, திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு, பாதுகாப்பு சோதனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
English Summary
Bomb threat to Air India Express flight during mid flight