ஒடிசாவில் இரு தேர்தல்களிலும் தனித்து போட்டி - பாஜக அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் வருகின்ற 19 ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு சில இடங்களில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் இந்த முறை நாடாளுமன்ற மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளதால் பிஜு ஜனதா தளம் கட்சி மற்றும் பா.ஜ.க. இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பாஜக தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து ஒடிசா மாநில பா.ஜ.க. தலைவர் மன்மோகன் சமால் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

 "பிரதமர் மோடியின் தலைமையில் வளர்ச்சியடைந்த ஒடிசா மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கிட, ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவை தொகுதிகள் மற்றும் 147 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp separate contest in odisa elections


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->