காவலர் கன்னத்தில் பளார் -அத்து மீறிய பாஜக எம்.எல்.ஏ-வால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சாசன் மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டுத் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அம்மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார், சுகாதாரத்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவீந்திர தங்கேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, விழா மேடையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளேவின் பெயர் இடம்பெறாததால், விரக்தியில் மேடையில் இருந்து கீழே இறங்கிய அவர் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறினார். இதனால், மேலும் கோபமடைந்த அவர் பாதுகாப்பு பணிக்காக படிக்கட்டில் நின்றிருந்த காவலரின் கன்னத்தில் அறைந்தார்.

அதன் பின்னர், அவர் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். துணை முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் எம்.எல்.ஏ. ஒருவர் காவலரை அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதைப்பார்த்த பலரும் பாஜக எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளேவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு மறுப்புத் தெரிவித்த காம்ப்ளே, "நான் யாரையும் தாக்கவில்லை. நான் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த போது யாரோ ஒருவர் வழிமறித்து வந்தார். அவரைத் தள்ளிவிட்டு முன்னால் சென்றேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 353, அதாவது அரசு ஊழியரை தனது கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் வகையில் தாக்குதல் அல்லது குற்றவியல் செயல் உள்ளிட்டவற்றின் கீழ் காம்ப்ளே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MLA Sunil Kamble slaps security in maharastra


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->