முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இயற்கையை எய்தினார்..!! சோகத்தில் பாஜக.!! மரு.இராமதாசு இரங்கல்..!! - Seithipunal
Seithipunal


இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி காட்சிகள் அமோக வெற்றியை பெற்ற நிலையில்., மீண்டும் பாராளுமன்றத்தின் ஆட்சியை தக்கவைத்து. இந்தியாவின் பிரதமராக மீண்டும் மோடியே பதிவேற்று., மோடி தலைமையிலான அரசுத்துறை மந்திரிகள் மற்றும் பிற கட்சியை சார்ந்த வெற்றிபெற்ற மந்திரிகள் தங்களின் பதவியை பதவியேற்றுக்கொண்டனர். 

இந்த நிலையில்., பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராக இருப்பவர் சுஷ்மா ஸ்வராஜ். இவரது சொந்த மாநிலம் ஹரியானா ஆகும். ஹரியானா மாநிலத்தில் கடந்த 1953 ஆம் வருடம் பிறந்தார். பின்னர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்., மக்களுக்காக நலன்கள் செய்து வந்த நிலையில்., ஏழு முறை மக்களைவை முதல்வராகவும் இருந்துள்ளார். 

சுஷ்மா ஸ்வராஜ், sushma swaraj,

இதுமட்டுமல்லாது இந்தியாவின் தலைநகரான டெல்லியின் மாநில முதல்வராகவும் இருந்துள்ளார். இதனைப்போன்று கடந்த 2014 ஆம் வருடம் முதல் 2019 ஆம் வருடம் வரை நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி சமயத்தில்., வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றி வந்த சமயத்தில்., இவரின் பணியில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து இந்திய மக்களின் நன்மதிப்பையும் பெற்றார். 

இந்திய வெளியுறவு துறையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பின்னர் பதவியேற்ற இரண்டாவது பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமையையும் கொண்டவர். தனது வாழ்நாளில் மக்களுக்காக உழைத்து வந்த நிலையில்., சிறுநீரக பிரச்சனையால் அவதியுற்று வந்தார். இந்த சமயத்தில்., கடந்த வருடத்தின் போது சிறுநீரக பாதிப்பிற்க்காக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.

ராமதாஸ், மரு.இராமதாசு, பாட்டாளி மக்கள் கட்சி, pmk, ramadoss, ramadoss pmk,

இந்நிலையில்., டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அவதியுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில்., மாரடைப்பு காரணமாக தனது 67 ஆவது வயதில் இயற்கையை எய்தினார். இதனை அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இவருக்கு பல அரசியல் தலைவர்களும் தங்களின் இணைய பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர். 

அந்த வகையில்., பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் திரு.மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தாவது., "பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. அவரது மறைவு பாரதிய ஜனதாவுக்கு பெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு இரங்கல். சுஷ்மா சுவராஜ் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். 25 வயதில் ஹரியானா மாநில அமைச்சர், 27 வயதில் ஹரியானா மாநில ஜனதா தலைவர்,  41 வயதில் மத்திய அமைச்சர், தில்லி முதலமைச்சர் என பல பதவிகளை வகித்தவர் குறைந்த வயதில் மறைந்தது சோகம் தான். உளமார்ந்த அஞ்சலி" என்று தெரிவித்துள்ளார். 

 

cinema news in tamil today 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp ex minister sushma swaraj died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->